Wednesday, January 25, 2017

சோயா வடை

சோயா வடை



தேவையான பொருட்கள்:-


  • கடலை பருப்பு - ½ கப்
  • சோயா - 1 கப்
  • கறிவேப்பிலை - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • இஞ்சி - சிறிது அளவு
  • பச்சை மிளகாய் - 1
  • வெங்காயம் - 1 பெரியது
  • எண்ணெய் - பொரிக்க 


செய்முறை:-


கடலை பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு சோயாவை சூடான தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை சோயாவில் இருந்து அழுத்தி எடுத்துவிடவும். பின்பு வெங்காயத்தை கட் பண்ணிக்கவும். கடலை பருப்புடன் சோயா மற்றும் இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் உப்பு இவற்றை சேர்த்து வடை பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதுடன் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வடை தட்டி எண்ணெய் போட்டு எடுக்கவும். சுவையான சோயா வடை ரெடி.

குறிப்பு: இதனுடன் புதினாவை சேர்த்து செய்யலாம்.




Wednesday, January 11, 2017

வெஜ் கிரேவி

வெஜ் கிரேவி

தேவையான பொருட்கள்:-

எண்ணெய்
வெங்காயம்
கடுகு
கேரட்
ப. மிளகாய்
கரமசாலா
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
குடை மிளகாய்
தக்காளி
உப்பு

செய்முறை:

வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும் கடுகு பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வெந்தவுடன் கேரட் சேர்க்கவும். பின்பு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். எண்ணெயில் தான் கேரட் வதங்கவேண்டும். தூள் வகைகளை சேர்த்து வதக்கவும். பின்பு குடை மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். சுவையான வெஜ் கிரேவி ரெடி.
(எல்லா காய்களிலும் (முருங்கை தவிர) வெஜ் கிரேவி செய்யலாம்.


Monday, January 9, 2017

செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்

செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்



தேவையான பொருட்கள்:-

  • உருளைக்கிழங்கு – 2
  • உப்பு – தேவையான அளவு
  • பெருஞ்சீரகம் தூள் - 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
  • பூண்டு – 5 பல்
  • கறிவேப்பிலை – சிறிது
  • வெங்காயம் - 1 பெரியது


செய்முறை:-

முதலில் உருளைக்கிழங்கை எடுத்து தோல் உரித்து வெட்டி வைக்கவும். ஒரு கடாயில் அவற்றை எடுத்து தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். பின்னர் அவற்றை வடிக்கட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்து சிறிது உப்பு பெருஞ்சீரகம் தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக டாஸ் செய்யவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கப்பட்ட பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் நன்றாக ரோஸ்ட் செய்யவும். செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி


ஐந்து அரிசி பணியாரம்

ஐந்து அரிசி பணியாரம்



தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி - 4 பங்கு
  • புழுங்கல் அரிசி - 1 பங்கு
  • உளுந்து - 50 கிராம்
  • சிறு பருப்பு – 50 கிராம்
  • வெல்லம் - சுவைக்கேற்ப
  • ஏலக்காய் - 3
  • உப்பு – 1 சிட்டிகை
  • எண்ணெய் - பொரித்து எடுக்க 


செய்முறை:-

பருப்பு மற்றும் அரிசி வகைகளை ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். அதனுடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் வைக்கவும். பின்பு எண்ணெயை ஊற்றி நன்றாக காய்ந்ததும். கரண்டியில் எடுத்து ஊற்றவும். வெந்தவுடன் எடுக்கவும். சுவையான பணியாரம் ரெடி.

செட்டிநாடு இறால் தொக்கு

செட்டிநாடு இறால் தொக்கு



அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:-

  • மிளகு - 1 ஸ்பூன்
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • பட்டை – 3
  • கிராம் - 4
  • ஏலக்காய் - 2
  • பூண்டு – 10
  • இஞ்சி – அரை துண்டு
  • பச்சை மிளகாய் - 1
  • காய்ந்த மிளகாய் - 1


தேவையான பொருட்கள்:

  • இறால் -250 கிராம்
  • வெங்காயம் - 2 சின்னதாக
  • எண்ணெய் - தேவையான அளவு
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
  • தனியா தூள் - ½ ஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • புளி கரைசல் - 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை:-

முதலில் அரைக்க பொருட்களை அரைத்துக்கொள்ளவும். அதன்பின்பு எண்ணெய் வாணலில் ஊற்றவும். பின்பு எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு கிளறவும். பின்பு அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். அதனுடன் இறால் சேர்த்து கிளறவும். பின்பு தூள் வகைகளை சேர்த்து பச்சைவாசம் போகும் வரை கிளறவும். தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். இறால் வேகுவதற்காக கொஞ்சம்  தண்ணீர் சேர்த்து கிளறவும். சுவையான செட்டிநாடு இறால் தொக்கு ரெடி.